பறவை காய்ச்சல் எதிரொலி - 15 ஆயிரம் கோழிகள்,30 ஆயிரம் முட்டைகளை அழித்த சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மாநிலம் கொரியா மாவட்டம் கிபகுந்த் பூரில் உள்ள அரசு கோழிப் பண்ணையில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


எச்5என்1 வைரஸ் பாதிப்புக்குள்ளான கோழிகளும், கால்நடைகளும் கடந்த டிசம்பர் 7-ந் தேதி உயிரிழந்தன. அவை சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கின நோய் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் பறவை காய்ச்சல் நோய் தாக்கம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பின்னர் பறவையினங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து கோழிகளும், காடைகளும் உயிரிழந்து வந்தன.

இதைத் தொடர்ந்து பறவை காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர். கொரியா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் 10 கிலோ மீட்டர் சுற்றுவட்டார பகுதிகளில் கோழிகள், காடைகள் அழிக்கப்பட்டன.

இதுவரை 15,426 கோழிகளும், 30,000 முட்டைகளும் அழிக்கப்பட்டன. இந்த வைரசால் அப்பகுதி மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. அழிக்கப்பட்டதற்கு ஈடாக இழப்பீடும் வழங்கப்பட்டதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Popular posts
அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடந்தது
Image
ஆம்பூர் அருகே மஞ்சுவிரட்டு போட்டியின்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்காவல் படையை சேர்ந்த இளைஞர் படுகாயம்
Image
மானியதள்ளி கிராம நியாய விலை கடையில் மஞ்சள் மற்றும் வேம்பு கலந்த நீரில் கைகளை கழுவிய பின்னரே பொருட்கள் ‌வாங்க பொதுமக்கள் அனுமதி. நியாயவிலை கடைக்காரரின் அதிரடி நடவடிக்கை .
Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தற்காப்பு வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது
Image